கற்பழிப்பு வழக்கில் எஸ்.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு ரமேஷ் ஜார்கிகோளி ஆஜராகவில்லை


கற்பழிப்பு வழக்கில் எஸ்.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு ரமேஷ் ஜார்கிகோளி ஆஜராகவில்லை
x
தினத்தந்தி 3 April 2021 2:10 AM IST (Updated: 3 April 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச வீடியோ விவகாரத்தில் உடல் நலக்குறைவால் பாதிப்பு என கூறி எஸ்.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு ரமேஷ் ஜார்கிகோளி ஆஜராகவில்லை. எனவே விசாரணைக்கு ஆஜராக 2 நாள் கால அவகாசம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: ஆபாச வீடியோ விவகாரத்தில் உடல் நலக்குறைவால் பாதிப்பு என கூறி எஸ்.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு ரமேஷ் ஜார்கிகோளி ஆஜராகவில்லை. எனவே விசாரணைக்கு ஆஜராக 2 நாள் கால அவகாசம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இளம்பெண்ணிடம் விசாரணை

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மீதான ஆபாச வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் நீதிபதி முன்னிலையில் ஆஜராகி இளம்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து, ஆபாச வீடியோ விவகாரம் குறித்து இளம்பெண்ணிடம் சிறப்பு விசாரணை குழு போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரித்து வருகிறார்கள். இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, அவர் வசித்து வந்த தங்கும் விடுதிக்கும் அழைத்து சென்று இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி இருந்தனர். ஏற்கனவே இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மீது கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண் வாக்குமூலம் அளித்திருப்பதால், இந்த வழக்கில் எப்போது வேண்டுமானாலும் ரமேஷ் ஜார்கிகோளி கைது ஆகலாம் என்று கூறப்படுகிறது.

ஜார்கிகோளிக்கு நோட்டீசு

இந்த நிலையில், இளம்பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வரும் சந்தர்ப்பத்தில், போலீசாருக்கு கிடைத்த தகவல்களின் பேரில் ரமேஷ் ஜார்கிகோளியிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்திருந்தார்கள். இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி ரமேஷ் ஜார்கிகோளிக்கும் சிறப்பு விசாரணை குழு போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்திருந்தார்கள். அதாவது நேற்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ரமேஷ் ஜார்கிகோளிக்கு அந்த நோட்டீசில் போலீசார் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக நேற்று ரமேஷ் ஜார்கிகோளி விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ரமேஷ் ஜார்கிகோளி உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும், இதனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் கூறப்பட்டது. இதனை அவரது வக்கீல் ஷியாம் சுந்தர் நேற்று உறுதி செய்துள்ளார்.

2 நாட்கள் காலஅவகாசம்

இதுகுறித்து ரமேஷ் ஜார்கிகோளியின் வக்கீல் ஷியாம் சுந்தர் நிருபர்களிடம் கூறுகையில், ஆபாச வீடியோ விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கு போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் அவர் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை.
இதுபற்றி சிறப்பு விசாரணை குழு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உடல் நலக்குறைவு காரணமாக அவர் அவதிப்படுவதால், 2 நாட்கள் காலஅவகாசமும் போலீசாரிடம் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போலீஸ் விசாரணைக்கு ரமேஷ் ஜார்கிகோளி ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். அதனால் அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜர் ஆவதுடன், போலீசாருக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்றார்.

5-ந் தேதி ஆஜர்?

ஆபாச வீடியோ விவகாரத்தில் ஏற்கனவே 3 முறை ரமேஷ் ஜார்கிகோளியிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றிருந்தனர். தற்போது இளம்பெண் போலீசாரிடம் வழக்கு சம்பந்தமாக தகவல்களை தெரிவித்திருப்பதால், அதுகுறித்து ரமேஷ் ஜார்கிகோளியிடம் விசாரித்து தகவல்களை பெறுவதுடன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் போலீசார் முடிவு செய்திருந்தனர். அவர் ஆஜராகாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் விசாரணைக்கு பின்பு அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுவதால், விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் போலீசாரிடம் 2 நாட்கள் காலஅவகாசம் கேட்டு இருப்பதாலும், வருகிற 5-ந் தேதி ரமேஷ் ஜார்கிகோளி விசாரணைக்கு ஆஜராகுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


Next Story