4 மாநிலங்களுக்கு மட்டுமே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்


மந்திரி சுதாகர்.
x
மந்திரி சுதாகர்.
தினத்தந்தி 3 April 2021 2:53 AM IST (Updated: 3 April 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

4 மாநிலங்களுக்கு மட்டுமே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

பெங்களூரு: கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி மராட்டியம், கேரளா, பஞ்சாப், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும். 

பிற மாநிலங்களுக்கு இந்த கட்டுப்பாடு கிடையாது. கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். 
இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story