என்.ஐ.ஏ-வை பயன்படுத்தி சிறையில் அடைப்பேன்: எதிர்க்கட்சி வேட்பாளரை மிரட்டிய பாஜக மந்திரி 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை
என்.ஐ.ஏ-வை பயன்படுத்தி சிறையில் அடைப்பேன் என்று எதிர்க்கட்சி வேட்பாளரை மிரட்டிய பாஜக மந்திரி 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை வித்துள்ளது.
கவுகாத்தி,
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 47 தொகுதிகளுக்கு கடந்த 27-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 39 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்றது. 40 தொகுதிகளில் முன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் பட்ருதீன் ஜமால் என்பவரின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, அஞ்சலிக் ஞான மோட்சா, ராஷ்டிரிய ஜனதா தளம், போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி இடம்பெற்றுள்ளன. தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக-வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, அக்கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் அசாமில் தொடர்ந்து பிரசாரம் நடத்தி வருகின்றனர்.
இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள போடோலேண்ட் மக்கள் முன்னணி சார்பில் ஹஹ்ராமா மோஹிலரி என்பவர் போட்டியிருகிறார்.
இதற்கிடையில், அசாம் பாஜக மூத்த தலைவரும், அம்மாநில மந்திரியுமான ஹிமந்தா பிஸ்வா சர்மா கடந்த 28-ம் தேதி நடந்த பாஜக பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஹஹ்ராமா மோஹிலரிக்கு மிரட்டல் விடுத்தார்.
பாஜக மந்திரி ஹம்ந்த் பிஸ்வா பிரசாரத்தின்போது பேசுகையில், ஹஹ்ராமா மோஹிலரி பயங்கரவாதம் செய்தால் அவர் சிறை செல்வார். நேரடியாக கூறுகிறேன்.. ஏற்கனவே ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன. இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்.ஐ.ஏ.) கொடுக்கப்படும். ஹேக்ரஞ்சர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கும் என்.ஐ.ஏ.விடம் கொடுக்கப்படும். ஹஹ்ராமா மோஹிலரியாக இருந்தாலும் சரி... யாராக இருந்தாலும் சரி போடோ நில எல்லைக்குள் யாரும் வன்முறை செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என்றார்.
என்.ஐ.ஏ.-வை பயன்படுத்தி சிறையில் அடைப்பேன் என்று எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரை பாஜக மந்திரி மிரட்டிய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் பாஜக மந்திரி ஹம்ந்த் பிஸ்வா 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்துள்ளது. இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) ஹம்ந்த் பிஸ்வா எந்தவிதமான தேர்தல் பிரசார நடவடிக்கைகள்ளும் ஈடுபடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story