ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குக்கு அனுமதி கோரி கடிதம்
ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி சொலிசிட்டர் ஜெனரலுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம்
நீரவ் மோடியை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் விவகாரத்தில் இந்திய நீதித்துறை, நிர்வாகத்தில் உள்ள அரசியல்வாதிகளிடம் சரணடைந்துவிட்டதாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்திருப்பது கோர்ட்டை அவமதிக்கும் வகையில் உள்ளது எனக் கூறி, அவருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலுக்கு வக்கீல் அலோக் ஸ்ரீவஸ்தவா கடிதம் எழுதியிருந்தார்.
பொருத்தமாக இருக்காதுஅந்த கடிதத்துக்கு பதில் அளித்துள்ள அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூவை கடந்த 16 ஆண்டுகளாக அறிவேன். எனவே இந்த விவகாரத்தை நான் கையாள்வது பொருத்தமாக இருக்காது. கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரலிடமும் மனு அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. எனவே இது தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரலிடம் கடிதம் அளியுங்கள் என பதில் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
சொலிசிட்டர் ஜெனரலுக்கு...அதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு வக்கீல் அலோக் ஸ்ரீவஸ்தவா கடிதம் எழுதியிருக்கிறார்.