ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு ஆராதனை
இன்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
புதுடெல்லி,
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3 ஆம் நாளில், அவர் மீண்டும் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படும் நிலையில், அவர் மீண்டும் உயிர்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் இன்று நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் திரளான அளவில் மக்கள் கலந்து கொண்டு, கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story