கர்நாடகத்தில் புதிதாக 4,373 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 4,373 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 April 2021 2:50 AM IST (Updated: 4 April 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 4,373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என்றும், வைரஸ் தொற்றுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 4,373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என்றும், வைரஸ் தொற்றுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

19 பேர் சாவு

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று புதிதாக 4,373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 10 ஆயிரத்து 602 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று மேலும் 19 பேர் வைரஸ் தொற்றுக்கு இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்து 610 ஆக அதிகரித்து உள்ளது. 

புதிதாக பாகல்கோட்டையில் 8 பேர், பல்லாரியில் 23 பேர், பெலகாவியில் 30 பேர், பெங்களூரு புறநகரில் 54 பேர், பெங்களூரு நகரில் 3 ஆயிரத்து 2 பேர், பீதரில் 172 பேர், சாம்ராஜ்நகரில் 18 பேர், சிக்பள்ளாப்பூரில் 13 பேர், சிக்கமகளூருவில் 36 பேர், சித்ரதுர்காவில் 14 பேர், தட்சிண கன்னடாவில் 83 பேர், தாவணகெரேயில் 29 பேர், தார்வாரில் 39 பேர், கதக்கில் 9 பேர், ஹாசனில் 59 பேர், ஹாவேரியில் 4 பேர், கலபுரகியில் 151 பேர், குடகில் 11 பேர், கோலாரில் 37 பேர், கொப்பலில் 32 பேர், மண்டியாவில் 36 பேர், மைசூருவில் 171 பேர், ராய்ச்சூரில் 19 பேர், ராமநகரில் 7 பேர், சிவமொக்காவில் 36 பேர், துமகூருவில் 167 பேர், உடுப்பியில் 53 பேர், உத்தர கன்னடாவில் 29 பேர், விஜயாப்புராவில் 18 பேர், யாதகிரியில் 13 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

24 மாவட்டங்களில்...

பெங்களூரு நகர், மைசூருவில் தலா 6 பேர், ஹாசனில் 3 பேர், மண்டியாவில் 2 பேர், துமகூரு, கலபுரகியில் தலா ஒருவர் என 19 பேர் இறந்தனர். 24 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. நேற்று ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

ஒட்டுமொத்தமாக 2 கோடியே 17 லட்சத்து 69 ஆயிரத்து 721 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. 327 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story