கொரோனா பாதிப்பு உயர்வு; 10 நகரங்களில் இரவு ஊரடங்கை அமல்படுத்த ஒடிசா அரசு முடிவு


கொரோனா பாதிப்பு உயர்வு; 10 நகரங்களில் இரவு ஊரடங்கை அமல்படுத்த ஒடிசா அரசு முடிவு
x
தினத்தந்தி 4 April 2021 5:28 AM IST (Updated: 4 April 2021 5:28 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு உயர்வை தொடர்ந்து 10 நகரங்களில் இரவு ஊரடங்கை அமல்படுத்த ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருகின்றன.  3,37,430 பேர் குணமடைந்த நிலையில், 2,421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை 1,921 பேர் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

இதனால் தொற்றை கட்டுப்படுத்த வருகிற திங்கட்கிழமை முதல் ஒடிசாவின் 10 நகரங்களில் இரவு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, சுந்தர்கார், ஜார்சுகுடா, சம்பல்பூர், பார்கர், பொலாங்கீர், நுவாபடா, காலஹண்டி, நவ்ராங்பூர், கோரபுட் மற்றும் மால்கன்கிரி ஆகிய நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்படும்.  மற்றும் தனிநபரின் இயக்கத்திற்கும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story