சத்தீஷ்காரில் என்கவுண்ட்டர்; 5 வீரர்கள், 12 நக்சலைட்டுகள் பலி


சத்தீஷ்காரில் என்கவுண்ட்டர்; 5 வீரர்கள், 12 நக்சலைட்டுகள் பலி
x
தினத்தந்தி 4 April 2021 6:34 AM IST (Updated: 4 April 2021 6:34 AM IST)
t-max-icont-min-icon

சத்தீஷ்காரில் நடந்த என்கவுண்ட்டரில் 5 வீரர்கள் மற்றும் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

பிஜாப்பூர்,

சத்தீஷ்காரின் நாராயண்பூர் மாவட்டத்தில் கடந்த 23ந்தேதி பாதுகாப்பு படையினர் சென்ற பேருந்து ஒன்றை சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வைத்து நக்சலைட்டுகள் தகர்த்தனர்.  இதில் மாவட்ட ரிசர்வ் படையை சேர்ந்த 5 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் பாதுகாப்பு வீரர்கள் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  இதன் ஒரு பகுதியாக பிஜாப்பூர் மாவட்டத்தில் சிறப்பு அதிரடி படை, மாவட்ட ரிசர்வ் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் கோப்ரா படை பிரிவை சேர்ந்த வீரர்கள் என 400க்கும் மேற்பட்டோர் சில்கர் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதில், வீரர்கள் மீது நக்சலைட்டுகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதனை தொடர்ந்து இரு தரப்பிலும் கடுமையான துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

இந்த மோதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  20 பேர் காயமடைந்தனர்.  இதேபோன்று நக்சலைட்டுகள் தரப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர்.  15 பேர் காயமடைந்தனர்.  காயமடைந்த வீரர்களை மீட்க 9 ஆம்புலன்சுகள் மற்றும் இரண்டு எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் உடனடியாக சென்றன.

Next Story