தடுப்பூசி போட சுகாதார பணியாளர்கள் புதிதாக பதிவு செய்ய முடியாது: மத்திய சுகாதாரத்துறை
தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்படாத பயனாளர்கள் முறைகேடாக முன்கள பணியாளர்கள் பெயரை பதிவு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது. இதன்பிறகு, மார்ச் 1 ஆம் தேதி முதல் 45-வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் 60-வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1 ஆம் தேதி முதல் 45-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி போடு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார பணியாளர்கள் புதிதாக பதிவு செய்ய வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடுவதில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள் என்ற பெயரில் தகுதியற்றவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக வந்த தகவலையடுத்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதன்படி ஏற்கனவே தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ள சுகாதார, முன்களப் பணியாளர்களும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சுகாதாரப் பணியாளர்கள் என புதிதாக வரும் எந்தப் பதிவையும் ஏற்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story