பெட்ரோல், டீசல் விலை வரும் நாட்களில் மேலும் குறையும்: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது கூறியதாவது:- பெட்ரோல், டீசல் விலை மற்றும் எல்.பி.ஜி சிலிண்டர் விலை தற்போது குறையத்தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் முன்பே கூறியது போல கச்சா எண்ணெய் விலை குறைவால் கிடைக்கும் பலனை பொதுமக்களுக்கே வழங்குவோம்” என்றார்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை ஆனது. இது தான் அதிகபட்ச பெட்ரோல், டீசல் விலையாக பேசப்பட்டது. அதன்பின்னர், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வந்தது. கடந்த சில நாட்களாக குறைந்தும் வருகிறது.
கச்ச எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருகின்றன.ஆனாலும், தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடக்க இருப்பதால் பெட்ரோல், டீசல் மாற்றம் இல்லாமல் இருந்து வருவதாக பரவலாக விமர்சிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story