பிஜாப்பூர் என்கவுண்டர்: சத்தீஷ்கர் முதல் மந்திரியுடன் அமித்ஷா பேச்சு


பிஜாப்பூர் என்கவுண்டர்: சத்தீஷ்கர் முதல் மந்திரியுடன் அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 4 April 2021 9:00 AM GMT (Updated: 4 April 2021 9:00 AM GMT)

சத்தீஸ்காரின் தண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா உள்ளிட்ட மாவட்டங்கள் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும்.

புதுடெல்லி,

சத்தீஷ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது. இதில் நக்சலைட்டுகள் தரப்பில் பெருத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாக சத்தீஷ்கர் முதல் மந்திரி கூறினார். 

அதேவேளையில்  பாதுகாப்பு படையினர் 22 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சத்தீஷ்கர் முதல் மந்திரி புபேஷ் பாகேலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக பேசினார். மேலும், மத்திய ரிசர்வ் படை இயக்குநரை நேரில் சென்று நிலவரம் குறித்து ஆய்வு செய்யுமாறு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். 

இதற்கிடையே, அசாமில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த அமித்ஷா, உடனடியாக பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக டெல்லி திரும்பியுள்ளார். 

Next Story