22 வீரர்கள் வீர மரணம்: துணிச்சலான வீரர்களின் தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது - பிரதமர் மோடி


22 வீரர்கள் வீர மரணம்: துணிச்சலான வீரர்களின் தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 4 April 2021 3:25 PM IST (Updated: 4 April 2021 3:25 PM IST)
t-max-icont-min-icon

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கிச்சண்டையில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா - பிஜாபூா் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்துள்ளனா். இந்த சண்டையில் 22 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிஜாப்பூர் எஸ்.பி  தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்த 31 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது .காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும்.  துணிச்சலான வீரர்களின் தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story