பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவரது மனைவி சுனிதா அகுஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிந்தாவுக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கவலைப்பட ஒன்றுமில்லை. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்” என்று அதில் தெரிவித்துள்ளார்.
கோவிந்தா கடந்த 2019-ம் ஆண்டு ரங்கீலா ராஜா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனிடையே பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று இன்று காலை உறுதி செய்யப்பட்டிருந்ததது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story