துப்பாக்கி சண்டையில் 22 வீரர்கள் பலி: ராகுல்காந்தி, பிரியங்கா இரங்கல்


துப்பாக்கி சண்டையில் 22 வீரர்கள் பலி: ராகுல்காந்தி, பிரியங்கா இரங்கல்
x
தினத்தந்தி 4 April 2021 10:43 PM IST (Updated: 4 April 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த 22 வீரர்களுக்கு ராகுல்காந்தி, பிரியங்கா இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி, 

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் 22 பேர் பலியானது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், 

சத்தீஸ்காரில் பிஜாப்பூரில் நடந்த பயங்கரமான நக்சல் தாக்குதலில் வீர மரணம் அடைந்த 22 வீரர்களின் தியாகத்திற்கு முன் முழு நாடும் வணங்குகிறது. 

தங்கள் குடும்பத்தினருக்கு இரங்கலையும் வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்துகிறேன். 

தேசம் அவர்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறது என கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,  தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘சத்தீஸ்காரில் நடந்த துப்பாக்கி சண்டையில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘ஒட்டுமொத்த நாடும் சோகத்திலும், கோபத்திலும் இருக்கிறது. நமது வீரர்களின் உயிர்த்தியாகத்தை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும். இந்த துயரமான நேரத்தில், அந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு கடவுள் துணை இருக்கட்டும்’’ என்று கூறியுள்ளார்.

Next Story