மத்திய பிரதேசத்தில் 53 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டும் 53 போலீசாருக்கு கொரோனா தொற்றுகள் ஏற்பட்டு உள்ளன.
இந்தூர்,
மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளுக்காக 20,369 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,029 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். மொத்த பாதிப்புகள் 2,79,275 ஆக உள்ளன.
இந்நிலையில், கூடுதல் காவல் கண்காணப்பாளர் குருபிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, 53 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.
கொரோனா தடுப்பூசி போடப்படும் சூழலில் எப்படி இவ்வளவு போலீசாருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என்ற கேள்விக்கு அவர் பதில் கூறும்பொழுது, இது வழக்கம்போல் நடைபெற கூடியது. அதனால் வருத்தமடைய எதுவுமில்லை.
போலீசாருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுவதில்லை. தடுப்பூசி போட்டு கொண்ட பல்வேறு மக்களுக்கும் இதுபோன்று ஏற்பட்டு உள்ளன என பராஷர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story