சிக்கமகளூருவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது; குழந்தைக்கு வைரஸ் தொற்று இல்லை


சிக்கமகளூருவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது; குழந்தைக்கு வைரஸ் தொற்று இல்லை
x
தினத்தந்தி 5 April 2021 3:39 AM IST (Updated: 5 April 2021 3:39 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வைரஸ் தொற்று இல்லை என டாக்டர் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு: சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வைரஸ் தொற்று இல்லை என டாக்டர் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிக்கு கொரோனா

சிக்கமகளூரு டவுனை சேர்ந்த ஒரு பெண், திருமணம் முடிந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் காய்ச்சல், சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர், சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் சென்று சிகிச்சை பெற்றார். மேலும் கர்ப்பிணி பெண்ணின் ரத்தமாதிரி, சளி சேகரித்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. அதோடு கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்திற்கும், டாக்டர்கள் தேதி குறித்தனர். ஆனால் டாக்டர்கள் குறித்த நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவில்லை. 

ஆண்குழந்தை பிறந்தது

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அரசு ஆஸ்பத்திரி பிரசவ டாக்டர், கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தனர். அதில் பெண், அழகான ஆண்குழந்தை பெற்றெடுத்தார். இதையடுத்து தாய்க்கு கொரோனா தொற்று இருப்பதால் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 

அதில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், தாய்க்கு தொற்று இருப்பதால் அவரிடம் இருந்து குழந்தையை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாக டாக்டர் மோகன்குமார் தெரிவித்து உள்ளார்.

Next Story