போதை பொருள் வழக்கில் கைதான நடிகர் அஜாஸ் கானுக்கு கொரோனா


போதை பொருள் வழக்கில் கைதான  நடிகர் அஜாஸ் கானுக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 April 2021 12:10 PM IST (Updated: 5 April 2021 12:10 PM IST)
t-max-icont-min-icon

போதை பொருள் வழக்கில் கைதான நடிகர் அஜாஸ் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி, அவரது தம்பி சோவிக் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு  இந்த போதைப்பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் கடந்த மாத இறுதியில் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தானில் இருந்து மும்பை திரும்பிய அவரிடம், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். 

இந்நிலையில் அஜாஸ் கானுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்ததையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், அவரிடம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story