தேசிய செய்திகள்

4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை! + "||" + shortage of Covid-19 vaccines

4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை!

4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு  தட்டுப்பாடு ஏற்படும் நிலை!
கொரோனா நோய் தடுப்பு மருந்துகளுக்கு 4 மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
சத்தீஸ்கர், ஹரியானா, ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் கொரோனா நோய் தடுப்பு மருந்துகள் குறைந்த அளவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அங்கு தினமும் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ஆனால் இன்றைய தேவைக்கு மட்டுமே அங்கு தடுப்பூசி கைவசம் உள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் தெலங்கானா மாநிலத்தில் கைவசம் உள்ள தடுப்பு மருந்துகள் 3 நாட்களுக்கு மட்டும் போதுமானதாக இருக்கும் என்றும், ஒடிசாவில் கைவசம் உள்ள தடுப்பு மருந்துகளும் 3 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் அந்த மாநில அரசு தரப்பில் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹரியானா மாநிலத்தில் கோவேக்சின் தடுப்பு மருந்து குறைவாக உள்ளதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மருந்துகளை உடனடியாக அனுப்பாவிட்டால் மருந்து விநியோகத்தை நிறுத்த வேண்டியிருக்கும் என்றும் ஹரியானா அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
2. இந்த கட்டுப்பாடுகளையே எல்லோரும் பின்பற்றலாமே!
‘பதுங்கி இருக்கும் கோரப் புலி போல’, கடந்த சில மாதங்களாக நன்றாக குறைந்து கொண்டிருந்த கொரோனா, இப்போது 2-வது அலையை உருவாக்கும் வகையில், பாய்ந்து தாக்கத் தொடங்கி விட்டது.
3. ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 46 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
4. கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம்; புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று புதிதாக 33 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
5. கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் காட்டாத வாக்குச்சாவடி அலுவலர்கள்
கடலூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி போட வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சுகாதாரத்துறையினர் வேதனை அடைந்தனர்.