இமாச்சல பிரதேசத்தில் 99 பள்ளி மாணவர்கள் மற்றும் 23 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று


இமாச்சல பிரதேசத்தில் 99 பள்ளி மாணவர்கள் மற்றும் 23 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 5 April 2021 3:20 PM IST (Updated: 5 April 2021 3:20 PM IST)
t-max-icont-min-icon

இமாச்சல பிரதேசத்தில் 99 பள்ளி மாணவர்கள் மற்றும் 23 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிம்லா,

இமாசல பிரதேசத்தின் டல்ஹௌசி ரிசார்ட்டில் எலைட் குடியிருப்பு பொதுப் பள்ளியில் 99 மாணவர்கள் மற்றும் 23 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக துணை ஆணையர் டி.சி.ராணா கூறுகையில்,

பள்ளியில் கொரோனா பாதித்த அனைவரும் எந்தவித அறிகுறியும் இல்லை. தொற்று பாதித்த அனைவரும் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவக் குழு அவர்களின் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

1970ஆம் ஆண்டில் இந்த பள்ளி தொடங்கப்பட்டது. கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளதால் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் ஏற்கெனவே மூட அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் நர்சிங் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்து செல்வதாலும், குடியிருப்பு வசதி கொண்ட கல்வி நிறுவனங்கள் திறந்துள்ளதாலும் கொரோனா தொற்று மீண்டும் பரவியுள்ளதாக் கூறப்படுகிறது.

Next Story