தேசிய செய்திகள்

அசாம்: 90 வாக்காளர்களே உள்ள வாக்குசாவடி ; 171 வாக்குகள் பதிவு தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் + "||" + 171 votes cast in Assam booth that has 90 voters; poll officials suspended

அசாம்: 90 வாக்காளர்களே உள்ள வாக்குசாவடி ; 171 வாக்குகள் பதிவு தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட்

அசாம்: 90 வாக்காளர்களே உள்ள வாக்குசாவடி ; 171 வாக்குகள் பதிவு தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட்
அசாமில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 90 வாக்காளர்களே இருந்த நிலையில், 171 வாக்குகள் பதிவானதால் தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கவுகாத்தி

அசாம் மாநிலம் ஹப்லாங் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கிராம தலைவர் ஒருவர் புதிய வாக்காளர் பட்டியலுடன் வந்து, அதன்படி வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதனை அங்கு பணியில் இருந்தவர்களும் ஏற்றுள்ளனர்.

இந்த நிலையில் 90 வாக்குகளுக்குப் பதில் 171 வாக்குகள் பதிவானது தெரியவந்ததை அடுத்து, அங்கு தேர்தல் பணியில் இருந்த 5 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி.. அடுத்த முதல்வர் யார்..?
அசாமில் ஆளும் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளத;முதல்வா் வேட்பாளர் போட்டி சா்வானந்த சோனோவால் மற்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகிய இருவரும் உள்ளனர்.
2. அசாம்: 4 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது - தேர்தல் ஆணையம்
அசாமில் 4 வாக்குச்சாவடிகளில் நேற்று அமைதியான முறையில் மறுவாக்குப்பதிவு நடைபெறதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
3. அசாம்: 4 வாக்குச்சாவடிகளில் வரும் 20-ம் தேதி மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அசாமில் 4 வாக்குச்சாவடிகளில் வரும் 20-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
4. பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்று அச்சம்: அசாம் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை ராஜஸ்தானுக்கு அனுப்பிவைத்த காங்கிரஸ்
பாஜக குதிரை பேர முயற்சியில் ஈடுபடலாம் என்ற அச்சம் நிலவி வருவதால் அசாம் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
5. அசாம்: பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் - காங்கிரஸ் போராட்டம்
அசாமில் பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.