நாடு முழுவதும் 7.9 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசி


நாடு முழுவதும் 7.9 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 5 April 2021 7:01 PM IST (Updated: 5 April 2021 7:01 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் 7.9 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் 7.9 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது.

இன்று காலை 7 மணி வரை, 12,31,148 முகாம்களில்‌ 7,91,05,163 பயனாளிகளுக்குக் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 79-வது நாளான நேற்று (ஏப்ரல் 04) ஒரு நாளில் நாடு முழுவதும் 16,38,464 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

இந்தியாவில் அன்றாட புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு (1,03,558) புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு, மாராட்டியம், சத்திஸ்கர், கர்நாடகம்,உத்தரப் பிரதேசம், தில்லி, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய எட்டு மாநிலங்களில் அன்றாட கரோனா புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

Next Story