அசாமில் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் ஹாப்லாங் தொகுதியில் குளறுபடி: மறுவாக்குப்பதிவுக்கு ஏற்பாடு


அசாமில் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் ஹாப்லாங் தொகுதியில் குளறுபடி: மறுவாக்குப்பதிவுக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 5 April 2021 9:21 PM IST (Updated: 5 April 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

அசாமில் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் ஹாப்லாங் தொகுதியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மறுவாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

அசாமில் திமா ஹசாவ் மாவட்டத்தில் ஹாப்லாங் தொகுதியிலிருக்கும் ஒரு வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 90 ஆக இருக்க, அங்கு மொத்தம் 171 வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட வாக்குப்பதிவில் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வாக்குச் சாவடியில் பணியிலிருந்த 5 தேர்தல் அலுவலர்களை மாவட்ட தேர்தல் அதிகாரி பணியிடைநீக்கம் செய்தார். மேலும் அங்கு மறுவாக்குப்பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அலுவலர்களைப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவு வாக்குப்பதிவுக்கு அடுத்த நாளான ஏப்ரல் 2-ம் தேதியே வழங்கப்பட்டபோதிலும் இன்று காலை தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தாக கூறப்படுகிறது.

Next Story