கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் - பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்
கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் அதுதொடர்பான விதிகளை கடுமையாக்கி உள்ளன.
இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘நாடு முழுவதும் கொரோனா அதிகமாகப் பரவிவருவது, புதிய கவலை, சவாலை உருவாக்கி உள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை நாம் மேலும் விரைவுபடுத்த வேண்டும்.
புதிய கொரோனா தடுப்பூசி மையங்களை திறப்பதற்கான விதிகளை தளர்த்த வேண்டும். அதேபோல, தடுப்பூசி போடுவதற்கான வயதுவரம்பையும் நீக்க வேண்டும்.
புதிய கொரோனா தடுப்பூசி மையங்களுக்கான விதிகள் எளிமையாக்கப்பட்டு, எல்லோரும் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டால், டெல்லி மக்கள் அனைவருக்கும் 3 மாதங்களில் டெல்லி அரசால் தடுப்பூசி போட முடியும்.’
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story