சிக்கிம் - நேபாளம் எல்லை அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு


சிக்கிம் - நேபாளம் எல்லை அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு
x
தினத்தந்தி 5 April 2021 10:57 PM IST (Updated: 5 April 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

சிக்கிம் - நேபாளம் எல்லை அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானது.

புதுடெல்லி,

சிக்கிம்-நேபாள எல்லைக்கு அருகே இன்று இரவு 8:49 மணிக்கு ரிக்டர் அளவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு வங்கம், அசாம் மற்றும் பீகாரின் வேறு சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளம் மற்றும் பூட்டானின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளிடம் கேட்டு வருகிறார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பீகார், அசாம் மற்றும் சிக்கிம் மாநில முதல்-மந்திரிகளிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story