கிழக்கு இந்திய பெருங்கடலில் நடைபெறும் பன்னாட்டு கடற்படை பயிற்சியில் இந்தியா இணைந்தது
கிழக்கு இந்திய பெருங்கடலில் நடைபெறும் பன்னாட்டு கடற்படை பயிற்சியில் இந்தியா இணைந்தது.
புதுடெல்லி,
கிழக்கு இந்திய பெருங்கடலில் பிரான்ஸ் தலைமையில் நடைபெறும் பன்னாட்டு கடற்படை பயிற்சியில் இந்தியா உள்பட குவாட் உறுப்பு நாடுகள் இணைந்துள்ளன.
3 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டு கடற்படை பயிற்சியில் பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன் இந்திய கடற்படையின் சத்புரா மற்றும் கில்டான் ஆகிய கப்பல்களும் பி8ஐ ரக தொலைதூர கடல் ரோந்து விமானமும் பங்கேற்கும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய கடற்படையின் செய்தி தொடர்பாளர் விவேக் மாத்வால் கூறுகையில் ‘‘வான்வெளி எதிர்ப்பு போர் மற்றும் வான் பாதுகாப்பு பயிற்சிகள் உள்ளிட்ட சிக்கலான மற்றும் மேம்பட்ட கடற்படை நடவடிக்கைகளுக்கு இந்த பயிற்சி மிகவும் உதவும். இந்தப் பயிற்சி நட்பு கடற்படைகளுக்கு இடையில் அதிக அளவு ஒருங்கிணைப்பு மற்றும் இயங்கக்கூடிய தன்மையை காண்பிக்கும்’’ என கூறினார்.
Related Tags :
Next Story