இந்தியாவில் மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 32.65 டிகிரி வெப்பநிலை பதிவு; 121 ஆண்டுகளில் 3-வது இடம்


இந்தியாவில் மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 32.65 டிகிரி வெப்பநிலை பதிவு; 121 ஆண்டுகளில் 3-வது இடம்
x
தினத்தந்தி 6 April 2021 12:20 AM IST (Updated: 6 April 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் கோடை வெயில் கடுமையாக வாட்டுகிறது.

இந்த சூழலில் இந்தியாவில் கடந்த மாதம் நிலவிய வெப்பநிலை குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கடந்த மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 32.65 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 19.95 டிகிரியும், சராசரி வெப்பநிலையாக 26.30 டிகிரி செல்சியசும் பதிவாகி இருக்கின்றன.

இது மார்ச் மாத இயல்பான அளவான 31.24 டிகிரி (அதிகபட்சம்), 18.87 டிகிரி (குறைந்தபட்சம்), 25.06 டிகிரி (சராசரி) செல்சியசை விட அதிகம் ஆகும். அந்தவகையில் கடந்த 11 ஆண்டுகளில் மிகவும் வெப்பம் மிகுந்த மார்ச் மாதமாக இது உருவாகி இருக்கிறது.

அதேநேரம் கடந்த 121 ஆண்டுகளில் இது 3-வது அதிகபட்ச வெப்பநிலையாகவும் பதிவாகி இருக்கிறது. அந்தவகையில் கடந்த 2010 மற்றும் 2004-ம் ஆண்டுகள் முதல் 2 இடங்களை பிடித்து உள்ளன. இந்த ஆண்டுகளில் முறையே 33.09 டிகிரி மற்றும் 32.82 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகபட்சமாக பதிவாகியிருக்கின்றன.

 


Next Story