சத்தீஷ்காரில் துப்பாக்கி சண்டையில் 24 வீரர்கள் பலியானதற்கு மோசமாக வியூகம் வகுத்ததே காரணம் - ராகுல்காந்தி கருத்து


சத்தீஷ்காரில் துப்பாக்கி சண்டையில் 24 வீரர்கள் பலியானதற்கு மோசமாக வியூகம் வகுத்ததே காரணம் - ராகுல்காந்தி கருத்து
x
தினத்தந்தி 6 April 2021 1:56 AM IST (Updated: 6 April 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

சத்தீஷ்காரில் துப்பாக்கி சண்டையில் 24 வீரர்கள் பலியானதற்கு மோசமாக வியூகம் வகுத்ததே காரணம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3-ந் தேதி பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 24 பாதுகாப்பு படையினர் பலியானார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். சி.ஆர்.பி.எப். டி.ஜி.பி. குல்தீப் சிங் கூறியதை அவர் மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் உளவுத்துறை தோல்வி எதுவும் இல்லை என்றும், பாதுகாப்பு படையினருக்கு சமமான எண்ணிக்கையில் நக்சலைட்டுகளும் பலியாகி இருப்பதாக குல்தீப் சிங் கூறியிருந்தார்.

அதை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-

உளவுத்துறை தோல்வி இல்லை என்றால், சம எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட என்ன காரணம்? இது, மோசமாக வகுக்கப்பட்டு, திறமையின்றி நிறைவேற்றப்பட்ட வியூகம் என்பதுதான் காரணம்.

வேண்டுமென்றே பலி கொடுப்பதற்கு நமது வீரர்கள், பலியாடுகள் அல்ல.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story