கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மீதான நில முறைகேடு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை


கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மீதான நில முறைகேடு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
x
தினத்தந்தி 6 April 2021 3:17 AM IST (Updated: 6 April 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மீதான நில முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: 

ரத்து செய்யப்பட்டது

  கர்நாடக முதல்-மந்திரியாக உள்ள எடியூரப்பா கடந்த 2006-ம் ஆண்டு துணை முதல்-மந்திரியாக பணியாற்றிார். அப்போது அவர் பெங்களூருவில் தொழில் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட 24 ஏக்கர் அரசு நிலத்தை சட்டவிரோதமாக தனி நபர்களுக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக ஆலம்பாஷா என்பவர் லோக்அயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று கூறி வழக்கு லோக்அயுக்தா கோர்ட்டால் ரத்து செய்யப்பட்டது.

  அதை தொடர்ந்து இந்த லோக்அயுக்தா கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், ஐகோர்ட்டு கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு கூறியது. இதில் எடியூரப்பா மீதான நில முறைகேடு வழக்கில் லோக்அயுக்தா கோர்ட்டால் ரத்து செய்யப்பட்ட உத்தரவு நிராகரிக்கப்பட்டது. எடியூரப்பா மீது ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை அடிப்படையில் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டது.

இடைக்கால தடை

  இதனால் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் எடியூரப்பா மனு செய்துள்ளார்.

  அவரது மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், எடியூரப்பா மீதான நில முறைகேடு வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும் என்று பிறப்பித்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். இதனால் எடியூரப்பாவுக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது.

Next Story