முதல் மந்திரியின் கொரோனா விழிப்புணர்வு பேரணியில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்


முதல் மந்திரியின் கொரோனா விழிப்புணர்வு பேரணியில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்
x
தினத்தந்தி 6 April 2021 6:58 AM IST (Updated: 6 April 2021 6:58 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேச முதல் மந்திரி திறந்த வேனில் சென்று மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இதனால், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கும்படி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதற்காக முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், கட்சியினர் சூழ சென்று, கடைகளின் முன்னே அமர்ந்து சமூக இடைவெளிக்கான படங்களை தரையில் வரைந்து உள்ளார்.  முக கவசங்களை மக்கள் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த நிலையில், மக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் திறந்த வேனில் பேரணியாக சென்றார்.  அவர் பேசும்பொழுது, மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன.

நீங்கள் அனைவரும் முக கவசங்களை அணியுங்கள்.  சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்.  கைகளை நன்றாக கழுவுங்கள் என்று கேட்டு கொண்டார்.

எனினும், இதனை படம் பிடிக்க சென்ற பத்திரிகையாளர்கள், முதல் மந்திரியின் பாதுகாப்புக்கு சென்ற போலீசார் உள்ளிட்டோர் அவரது அறிவுரையை கேட்டு கொண்டது போல் தெரியவில்லை.  ஏனெனில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று முதல் மந்திரி வலியுறுத்திய வேளையில், அவர்கள் அனைவரும் அவற்றை மறந்து அருகருகே காணப்பட்டனர்.

Next Story