கேரளாவில் இடதுசாரி கூட்டணி வரலாற்று வெற்றி பெறும்: பினராயி விஜயன் நம்பிக்கை


கேரளாவில் இடதுசாரி கூட்டணி வரலாற்று வெற்றி பெறும்:  பினராயி விஜயன் நம்பிக்கை
x
தினத்தந்தி 6 April 2021 11:48 AM IST (Updated: 6 April 2021 11:48 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி வரலாற்று வெற்றி பெறும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி  பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சி.ரகுநாத் போட்டியிடுகிறார்.

 பினராயி விஜயன் தனது தர்மடம் தொகுதியில் இன்று வாக்களித்தார். அதன்பின் பினராயி விஜயன் நிருபர்களுக்கு  பேட்டி அளிக்கையில் கூறியதாவது: ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி வரலாற்று வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என நம்புகிறேன். 

இடதுசாரிகளுடன் துணையாக இருக்கும் மக்கள் மீது தீவிரமான நம்பிக்கை இருக்கிறது. பாஜக, நீமம் தொகுதியில் மட்டும் கடந்த தேர்தலில் வென்றது. ஆனால், இந்த முறை பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவிடமாட்டோம். கடந்த தேர்தலைவிட இந்த முறை நாங்கள் வரலாற்று வெற்றி பெறுவோம். ஐயப்ப பக்தர்களும், அனைத்துக் கடவுள்களும் இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்” என்றார். 


Next Story