ராஜஸ்தான் மாநிலம் பலோடி சிறையில் இருந்து 16 கைதிகள் தப்பிய விவகாரம்: 16 காவலர்கள் சஸ்பெண்ட்
ராஜஸ்தான் மாநிலம் பலோடி சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் 16 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஜோத்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பலோடி நகரில் உள்ள துணை சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் தப்பி ஓடினர். சிறைக்காவலர்கள் மீது மிளகாய் பொடி வீசி விட்டு சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தப்பி ஒடிய கைதிகளை பிடிக்கும் பணி மாநிலம் முழுக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜோத்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கைதிகள் தப்பி ஓடிய விவகாரம் தொடர்பாக சிறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் 16 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story