தேசிய செய்திகள்

ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் எங்களுக்கு துணையாக உள்ளனர் - கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் பேச்சு + "||" + Lord Ayyappa and all gods with LDF govt says Pinarayi Vijayan

ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் எங்களுக்கு துணையாக உள்ளனர் - கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் பேச்சு

ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் எங்களுக்கு துணையாக உள்ளனர் - கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் பேச்சு
ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் தங்கள் அரசுக்கு துணையாக உள்ளது என்று கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,

140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 

கேரளாவில் ஆளும் கட்சியான இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி, காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி அரசுக்கு இந்த தேர்தலில் சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

பெண்களை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய அனுமதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள இடதுசாரிகள் அரசு கையாண்ட விவகாரம் இத்தேர்தலில் விமர்சனங்களை சந்தித்தது. இந்த விவகாரத்தில் ஐய்யப்ப பக்தர்களின் உணர்வுகளை இடதுசாரிகள் அரசு புண்படுத்திவிட்டதாக இடதுசாரிகள் அரசு மீது காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது. அதேபோல், நாயர் சர்வீஸ் சோசைட்டி தலைவர் சுகுமாரன் என்பவர் பேசுகையில், ஐயப்பனின் கோபம் இடதுசாரிகள் அரசு மீது இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சுகுமாரன் கருத்துக்கும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும் கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார். தர்மடம் தொகுதியில் இன்று காலை தனது வாக்கை பதிவு செய்த முதல்மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய பினராயி விஜயன், ஐயப்ப பக்தரான சுகுமாரன் அப்படி செல்வதற்கு வாய்ப்பில்லை. ஐயப்பன் மற்றும் அனைத்து கடவுள்களும் மற்றும் பிற மதநம்பிக்கைகளை பின்பற்றும் மக்களின் கடவுள்களும் இந்த அரசுடன் (இடது ஜனநாயக முன்னணி) துணையாக உள்ளனர். ஏனென்றால் இந்த அரசு மக்களை பாதுகாக்கிறது. மக்களுக்கு நன்மை செய்பவர்களுடன் தான் அனைத்து கடவுள்களும் உள்ளனர். அதைத்தான் நீங்கள் பார்க்கவேண்டும்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்த மாபெரும் வெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - பினராயி விஜயன் பேச்சு
இந்த மாபெரும் வெற்றியை நான் கேரள மக்களுக்கு தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன் என்று முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடர்ந்து முன்னிலை
கேரளாவில் 94 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
3. கேரளாவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது - மாலை 7 மணி நிலவரப்படி 73.58% வாக்குப்பதிவு
கேரளாவில் மாலை 7 மணி நிலவரப்படி 73.58% வாக்குகள் பதிவாகியுள்ளது.
4. கேரளா சட்டப்பேரவை தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 70.03 சதவீத வாக்குகள் பதிவு
கேரளா சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 70.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது
5. கேரளா சட்டசபை தேர்தல்: மாலை நிலவரப்படி 58.66 சதவீத வாக்குகள் பதிவு
கேரளா சட்டசபை தேர்தலில் மாலை நிலவரப்படி 58.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது