கேரளாவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது - மாலை 7 மணி நிலவரப்படி 73.58% வாக்குப்பதிவு
கேரளாவில் மாலை 7 மணி நிலவரப்படி 73.58% வாக்குகள் பதிவாகியுள்ளது.
திருவனந்தபுரம்,
140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
கேரளாவில் ஆளும் கட்சியான இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி, காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் 1,32,83,724 ஆண் வாக்களர்கள், 1,41,62,025 பெண் வாக்காளர்கள், 290 திருநங்கைகள் உள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் 957 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மாலை 7 மணி நிலவரப்படி 73.58% வாக்குகள் பதிவாகியுள்ளது.
Related Tags :
Next Story