மும்பை சி.ஆர்.பி.எப்.புக்கு அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் பெயரில் மிரட்டல் மெயில்


மும்பை சி.ஆர்.பி.எப்.புக்கு அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் பெயரில் மிரட்டல் மெயில்
x
தினத்தந்தி 7 April 2021 4:09 AM IST (Updated: 7 April 2021 4:09 AM IST)
t-max-icont-min-icon

மும்பை சி.ஆர்.பி.எப்.புக்கு அமித்ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் பெயரில் மிரட்டல் மெயில் வந்துள்ளது.

புதுடெல்லி,

மும்பையில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரது பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன் மிரட்டல் மெயில் ஒன்று வந்துள்ளது.

இதுபற்றி சி.ஆர்.பி.எப்.பின் டி.ஜி.பி. குல்தீப் சிங் கூறும்பொழுது, எங்களுக்கு வந்த இ-மெயிலை மராட்டியம் மற்றும் மத்தியில் உள்ள தொடர்புடைய அமைப்புகளுக்கு அனுப்பி வைத்து விட்டோம்.

அந்த மெயில் பற்றி அவர்கள் தீர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.  அவர்கள் அறிவுரையின்படி, நாங்கள் பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியில் பாதுகாப்பு வீரர்கள் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  இதன் ஒரு பகுதியாக பிஜாப்பூர் மாவட்டத்தில் சிறப்பு அதிரடி படை, மாவட்ட ரிசர்வ் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் கோப்ரா படை பிரிவை சேர்ந்த வீரர்கள் என நூற்றுக்கணக்கானோர் மீது நக்சலைட்டுகள் சில்கர் வனப்பகுதியில் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினர்.

இதில், பாதுகாப்பு படையினரில் 22 பேர் உயிரிழந்தனர்.  31 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில், மத்திய மந்திரிக்கு மிரட்டல் விடும் வகையில் சி.ஆர்.பி.எப்.புக்கு கடிதம் வந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Next Story