ரெப்போ வட்டி விகிதத்தில் இந்த ஆண்டு மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்


ரெப்போ வட்டி விகிதத்தில் இந்த ஆண்டு மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்
x
தினத்தந்தி 7 April 2021 6:15 AM GMT (Updated: 7 April 2021 6:16 AM GMT)

ரெப்போ வட்டி விகிதம் இந்த ஆண்டு 4 சதவீதமாகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனாவின் 2வது அலை காரணமாக, மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகளால் உள்நாட்டு வளர்ச்சியில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த நிதிஆண்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “2021-22ம் நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச் 10.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளோம். சந்தைகளில் போதுமான பணப்புழக்கம் நிலவும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் குறுகிய கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்றும் அது இந்த ஆண்டு 4 சதவீதமாகவே தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரம் ரிவர்ஸ் ரெபோ வட்டி வகிதம் 3.35 சதவீதமாகவே இருக்கும் என்றும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

Next Story