தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை- சுகாதாரத்துறை மந்திரி தகவல் + "||" + Maharashtra Vaccine SOS, Stocks Only For 3 Days, Some Centres Had To Shut

மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை- சுகாதாரத்துறை மந்திரி தகவல்

மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை- சுகாதாரத்துறை மந்திரி தகவல்
மராட்டியத்தில் இதுவரை 82 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பரவல் உச்சத்தில்  உள்ளது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக  உள்ள மராட்டியத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால் மராட்டியத்தில் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில், மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். இன்னும் 3 நாள்கள் மட்டுமே  போடக்கூடிய அளவுக்கு தடுப்பூசிகள் இருப்பு இருப்பதாகவும், மாநிலத்தின் பல இடங்களில் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும் ரஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.

 உடனடியாக கூடுதல் டோஸ் தடுப்பூசிகளை மராட்டியத்திற்கு அனுப்ப வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் நேற்று நடைபெற்ற ஆலோசனையின் போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் மந்திரி தெரிவித்தார். மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி 3 சதவீதம் வீணாவதாகவும் நாட்டில் 6 சதவீதம் அளவுக்கு வீண் ஆகி வருவதாகவும் ராஜேஷ் தோப் தெரிவித்தார்.  மராட்டியத்தில் இதுவரை 82 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பவானி நகராட்சி இளநிலை பொறியாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா
பவானி நகராட்சி இளநிலை பொறியாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2. ராஜஸ்தானில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்
ராஜஸ்தானில் இன்று மாலை 6 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
3. கேரளாவில் இன்று 8,126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று 8 ஆயிரத்து 126 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 88 லட்சமாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 88 லட்சமாக அதிகரித்துள்ளது.
5. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
கொரோனா பரவிய கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் சிகிச்சைக்கு பின்னர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தார்.