தேசிய செய்திகள்

பஞ்சாபில் ஏப்.30 ஆம் தேதி இரவு ஊரடங்கு: மாநில அரசு அறிவிப்பு + "||" + Punjab Government imposes night curfew from 9pm-5am across the entire State till April 30,

பஞ்சாபில் ஏப்.30 ஆம் தேதி இரவு ஊரடங்கு: மாநில அரசு அறிவிப்பு

பஞ்சாபில் ஏப்.30 ஆம் தேதி இரவு ஊரடங்கு: மாநில அரசு அறிவிப்பு
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பஞ்சாபில் வரும் 30 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ்,

நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில்  இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநில அரசும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசியல் கூட்டங்களை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், உள் அரங்கில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும், திறந்த வீதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100- பேர் வரை மட்டுமே கலந்து கொள்ளலாம் எனவும் மாநில அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல் எதிரொலி: மும்பை மாநகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
மும்பை மாநகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இதில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
2. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மும்பையில் பகல் நேரத்திலும் 144 தடை உத்தரவு
மும்பையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பகல் நேரத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
3. கொரோனா பரவல் எதிரொலி: கேரளாவில் இறுதிக்கட்ட பெருந்திரள் பிரசாரத்துக்கு தேர்தல் கமிஷன் தடை
கொரோனா பரவல் எதிரொலியாக கேரளாவில் இறுதிக்கட்ட பெருந்திரள் பிரசாரத்துக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
4. கொரோனா பரவல் எதிரொலி; திருப்பதியில் இலவச தரிசன பக்தர்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக குறைக்க ஆலோசனை
கொரோனா தொற்று 2-வது அலை பரவி வருவதால், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் இலவச தரிசன பக்தர்களின் எண்ணிக்கையை 22 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
5. கொரோனா பரவல் எதிரொலி; டெல்லியில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
கொரோனா பரவல் காரணமாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் டெல்லியில் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.