லக்னோவில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு + "||" + Night curfew to be imposed in Lucknow from tomorrow between 9 pm and 6 am: Police Commissioner of Lucknow DK Thakur
லக்னோவில் நாளை முதல் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து தினசரி தொற்றுகள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்த நிலையில், கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்த வண்ணம் உள்ளன.
பஞ்சாப் அரசு, இரவு, 9:00 மணி முதல், காலை, 5:00 மணி வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இது, ஏப்.,30 வரை அமலில் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இரவு, 10:00 மணி முதல், காலை, 5:00 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப் படவில்லை.
இந்நிலையில் உத்தர பிரதேசம் லக்னோவில் கொரோனா பரவலை தடுக்க நாளை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த பட உள்ளதாக லக்னோ காவல் ஆணையர் டி.கே.தாகூர் தெரிவித்துள்ளார்.