கொரோனா தடுப்பூசி: ஒவ்வொரு இந்தியனுக்கும் தகுதி இருக்கிறது - ராகுல்காந்தி கருத்து
பாதுகாப்பான வாழ்க்கைக்கான வாய்ப்பை பெற ஒவ்வொரு இந்தியனுக்கும் தகுதி இருக்கிறது என ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா தடுப்பூசியை அதை விரும்புபவர்களுக்கு போடாமல், அது யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும் போடவேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இந்தநிலையில், இதை விமர்சிக்கும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.
அதில், ‘‘தேவை, விருப்பம் என்று விவாதிப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. பாதுகாப்பான வாழ்க்கைக்கான வாய்ப்பை பெற ஒவ்வொரு இந்தியனுக்கும் தகுதி இருக்கிறது’’ என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story