கொரோனா மீண்டும் அதிகரிப்பு: கேரளாவில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு
கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வருவதை கருத்தில் கொண்டு கேரளாவில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று 3,502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தினசரி பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மொத்த பலி எண்ணிக்கை 4,710 ஆக உயர்ந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று கேரள தலைமை செயலாளர் ஜாய் தலைமையில் கொரோனா கண்காணிப்பு உயர் மட்ட குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. கூட்டத்தில், கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வருவதை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும், வெளிநாடுகள், அண்டை மாநிலங்களில் இருந்து வருவோரை 7 நாட்கள் தனிமைப்படுத்த ஏற்கனவே உள்ள உத்தரவு தொடரும். முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் மூலம் தீவிர பரிசோதனை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story