கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டார் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று போட்டுக்கொண்டார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வ்ருகிறது. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 9 கோடியே 01 லட்சத்து 98 ஆயிரத்து 673 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பாஜக மூத்த தலைவரான எல்.கே. அத்வானி கடந்த மாதம் 9-ம் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.
இந்நிலையில், சுமார் 1 மாதம் கழித்து எல்.கே. அத்வானி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று போட்டுக்கொண்டார். 93 வயதான எல்.கே. அத்வானிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story