பெண் வாக்காளர்கள் மீது தகாத முறையில் ஈடுபடும் சிஆர்பிஎஃப் வீரர்கள்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
பெண் வாக்காளர்கள் மீது தகாத முறையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஈடுபடுகிறார்கள் என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் மூன்று கட்ட சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மோதல் போக்கு நீடித்த வண்ணம் உள்ளது. முன்னதாக பாஜகவினர் சிலர் தன்னைத் தாக்கியதாக குற்றம்சாட்டி மம்தா காலில் மாவுக்கட்டு போட்டிக்கொண்டு வீல்சேரில் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் தற்போது மேற்கு வங்க பெண் வாக்காளர்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் கூச் பெஹர் மாவட்டத்தில் பிரச்சார ஊர்வலத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி கூறியதாவது:-
வாக்காளர் ஒருவரை சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், பொதுமக்களை தாக்கினர்.
அமித் ஷாவின் அறிவுரையின்பேரிலேயே சிஆர்பிஎஃப் வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். கூட்ட நெருக்கடியில் வாக்கு செலுத்த வரும் வங்காள பெண்கள் மீது தகாத முறையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஈடுபடுகின்றனர். பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சில வாக்காளர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்,
Related Tags :
Next Story