டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 பேர் பலி
டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி முழுவதும் நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று பிற்பகல் 12 மணியளவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உள்பட 8 கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர்.
கடந்த 15 நாள்களுக்கு மேலாக டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் ஆக்சிஜன் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலிருந்தும் ஆக்சிஜன் தேவை என அறிக்கை வருகிறது. டெல்லிக்கு தினமும் 976 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்று நாங்கள் நீதிமன்றங்களில் கூறியுள்ளோம் ஆனால் எங்களுக்கு 490 டன் ஆக்சிஜன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று எங்களுக்கு 312 டன் மட்டுமே கிடைத்தது. இது எவ்வாறு சாத்தியப்படும் என ? டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.
Related Tags :
Next Story