ஸ்புட்னிக்-"வி" தடுப்பு மருந்து ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்தது


ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்து ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்தது
x
தினத்தந்தி 1 May 2021 4:48 PM IST (Updated: 1 May 2021 4:48 PM IST)
t-max-icont-min-icon

ஸ்புட்னிக்-"வி" தடுப்பு மருந்து ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்தது.

ஐதராபாத்,

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் நாள்தோறும் பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. மற்றொரு புறம், சில மாநிலங்களில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த பின்னணியில், கொரோனா சிகிச்சைக்கு தேவையான 17 மருத்துவ உபகரணங்களை சில நிபந்தனைகளுடன் இறக்குமதி செய்ய 3 மாதங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், ஆக்சிஜன் குப்பிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், நெபுலைசர்கள், வென்டிலேட்டர்கள் உள்பட 17 மருத்துவ உபகரணங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டாது.

இந்நிலையில்,  ஸ்புட்னிக்-"வி" தடுப்பு மருந்து ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்தது. 

முதற்கட்டமாக ரஷ்யாவில் இருந்து 1.50 லட்சம் ஸ்புட்னிக்-"வி" கொரோனா தடுப்பு மருந்துகள் ஐதராபாத் வந்தடைந்தன. டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்தது. 

Next Story