மேற்குவங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் முன்னிலை


மேற்குவங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் முன்னிலை
x
தினத்தந்தி 2 May 2021 5:25 PM IST (Updated: 2 May 2021 5:25 PM IST)
t-max-icont-min-icon

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். 292 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

அதில், 215 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இடதுசாரிகள் எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை. மற்றவை 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. 

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காளத்தில் 2 தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story