மீண்டும் இடதுசாரி கூட்டணி ஆட்சி: கேரள மக்களுக்கு சீதாராம் யெச்சூரி நன்றி
கேரள சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதற்காக கேரள வாக்காளர்களுக்கு மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மீ்து முன்எப்போதும் இல்லாதவகையில் நம்பிக்கை வைத்த கேரள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா உள்பட மக்கள் சந்தித்த சவால்களை இடதுசாரி கூட்டணி அரசு சிறப்பாக கையாண்டது.பெருந்தொற்றை எப்படி கையாள்வது என்று உலகத்துக்கே ‘கேரள மாடல்’ என்று காட்டியது. இனியும் அந்த சவால்களை சந்திக்கும்.
நாடும், கேரள மாநிலமும் தற்போது கொரோனாவால் ஏற்பட்ட வாழ்வாதார பிரச்சினை, மதச்சார்பின்மையை பாதுகாப்பது என்ற இரட்டை ஆபத்துகளை சந்தித்து வருகின்றன. இதில் இடதுசாரி கூட்டணி தனது பணியை உரிய முறையில் நிறைவேற்றும். கேரள மக்களும் எப்போதும்போல் தொடர்ந்து ஒன்றாக நிற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த நேரத்தில் கொரோனாவுக்கு பலியானோருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இந்த கொரோனாவை ஒன்றாக சேர்ந்து முறியடிப்பதுடன், சிறப்பான இந்தியாவையும், கேரளாவையும் உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.