மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்


மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
x
தினத்தந்தி 3 May 2021 2:49 AM IST (Updated: 3 May 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹல்டியா,

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2ல்) நடைபெற்றது.  இதில், நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், நந்திகிராம் தொகுதிக்கான முடிவுகள் அறிவிப்பில் சில குளறுபடிகள் நடந்துள்ளன என்று எனக்கு தகவல்கள் வந்துள்ளன என்று மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு கூறினார்.

தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ணும்படி அவர் கடிதமும் எழுதினார்.

நந்திகிராம் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளரான சுவேந்து அதிகாரி டுவிட்டர் வழியே, நந்திகிராம் மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.  இதனை தொடர்ந்து அவரது பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது ஹல்டியா நகரில் வைத்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுதவிர்த்து, செய்தி சேகரிக்க சென்ற ஊடகக்காரர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அதிவிரைவு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Next Story