தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 56,647 பேருக்கு கொரோனா தொற்று; மும்பையில் பாதிப்பு குறைகிறது + "||" + Corona infection in 56,647 new cases in Maharashtra; Impact is declining in Mumbai

மராட்டியத்தில் புதிதாக 56,647 பேருக்கு கொரோனா தொற்று; மும்பையில் பாதிப்பு குறைகிறது

மராட்டியத்தில் புதிதாக 56,647 பேருக்கு கொரோனா தொற்று; மும்பையில் பாதிப்பு குறைகிறது
மராட்டியத்தில் புதிதாக 56 ஆயிரத்து 647 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

56,647 பேர்

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 56 ஆயிரத்து 647 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்து 22 ஆயிரத்து 401 ஆக உயர்ந்து உள்ளது. மாநிலத்தில் நேற்று 51 ஆயிரத்து 356 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.

இதுவரை 39 லட்சத்து 81 ஆயிரத்து 658 பேர் குணமாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 6 லட்சத்து 68 ஆயிரத்து 358 பேர் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

669 பேர் பலி

இதேபோல மாநிலத்தில் மேலும் 669 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகினர். இதுவரை தொற்றுக்கு 70 ஆயிரத்து 284 பேர் உயிரிழந்து உள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் 84.31 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். 1.49 சதவீதம் பேர் உயிரிழந்து உள்ளனர். மாநிலத்தில் இதுவரை 2 கோடியே 76 லட்சத்து 52 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

மும்பை பாதிப்பு

தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதில் நேற்று நகரில் புதிதாக 3 ஆயிரத்து 672 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 56 ஆயிரத்து 204 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 5 லட்சத்து 83 ஆயிரத்து 873 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 5 ஆயிரத்து 542 பேர் குணமாகினர்.

இதேபோல நகரில் மேலும் 79 போ் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 330 ஆக அதிகரித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை
மராட்டியத்தில் ஒரே நாளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
2. மராட்டியத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து ஒரே நாளில் 71,736 பேர் குணமடைந்தனர்
மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 71 ஆயிரத்து 736 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகினர். புதிய பாதிப்பும், பலி எண்ணிக்கையும் குறைந்தது.
3. மராட்டியத்தில் மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி மந்திரி நவாப் மாலிக் தகவல்
மராட்டியத்தில் மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என மந்திரி நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
4. மராட்டியத்தில் மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி; மந்திரி நவாப் மாலிக் தகவல்
மராட்டியத்தில் மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என மந்திரி நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
5. மராட்டியத்தில் விபரீதம் மது கிடைக்காததால் கிருமி நாசினி குடித்த 6 பேர் பலி
மராட்டியத்தில் மதுபானம் கிடைக்காததால் கிருமி நாசினியை குடித்த 6 ேபர் உயிரிழந்தனர்.