பஞ்சாப் மாநிலம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிப்பு


கோப்பு படம் (பிடிஐ)
x
கோப்பு படம் (பிடிஐ)
தினத்தந்தி 3 May 2021 8:55 AM IST (Updated: 3 May 2021 8:55 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் மாநிலம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பஞ்சாப் மாநிலத்திற்குள் வரும் பயணிகள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் ஆகும். 

சினிமா திரையரங்குகள் மூடப்படும், உணவு விடுதிகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் வரும் மே 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பஞ்சாப்பில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உள்ளது.  மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 78 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 



Next Story