அசாமில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி.. அடுத்த முதல்வர் யார்..?
அசாமில் ஆளும் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளத;முதல்வா் வேட்பாளர் போட்டி சா்வானந்த சோனோவால் மற்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகிய இருவரும் உள்ளனர்.
கவுகாத்தி
அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கி ஏப். 6-ஆம் தேதி வரை 3 கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. ஆளும் அரசுக்கு எதிரான வாக்குகள் மற்றும் சிஏஏவுக்கு எதிரான மக்களின் மனநிலையை சமாளித்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது பா.ஜனதா கூட்டணி. மஜுலி தொகுதியில் போட்டியிட்ட முதல்வா் சா்வானந்த சோனோவால் 43,192 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ராஜீவ் லோச்சனை வென்றாா்.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை விட பா.ஜனதா முன்னிலையில் இருந்து வந்தது. இறுதியில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி முன்னிலை பெற்றது. அடுத்த முதல்வா் யாா் என கட்சித் தலைமை முடிவு செய்யும் என முதல்வா் சா்வானந்த சோனோவால் தெரிவித்தாா்.
முதல்வா் வேட்பாளர் போட்டி சா்வானந்த சோனோவால் மற்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகிய இருவரும் உள்ளனர்.
தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவா் ரிபுன் போரா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Related Tags :
Next Story